ஆனந்தமான இந்திய வெற்றி!
கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்! நான் ஒரு 150+ ரன்கள் அவசியம் என எண்ணினேன். நமது பௌலர்களோ 100 ரன்களே போதும் என்று கூறும் வகையில் ஆஸ்திரேலியாவை 93 ரன்களில் சுருட்டி விட்டனர்.
சச்சின் தான் இன்றைய நமது ஆட்டத்திற்கு, கில்லஸ்பியின் ஒரு ஓவரில் அடித்த 3 பவுன்டரிகள் வாயிலாக, முதல் உத்வேகம் தந்தார். இதனால், சிறிது தடுமாறிக் கொண்டிருந்த லஷ்மண் உற்சாகம் பெற்று, அடுத்த ஓவரில், மெக்ராத்தை சற்று விளாசினார். ஆட்டம் சூடு பிடித்து, ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக வழி வகுத்தது.
அலுவலகத்தில் இருந்த நான், ஆஸ்திரேலியா ஸ்கோர் 58/7 இருந்தபோது பக்கத்தில் உள்ள நண்பர் இல்லத்துக்கு விரைந்தேன் (நல்ல மழையில்!), இந்திய வெற்றியை TV-யில் கண்டு களிக்கலாமே என்று. இன்னுமொரு விக்கெட் 78-இல் வீழ்ந்தது. 30வது ஓவரின் முடிவில் ஸ்கோர் 93/8. நான் கொஞ்சம் மூட்அவுட் ஆகி, இந்தியா ஜெயிக்காது போல் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு, நண்பரின் வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகத்திற்கு சென்று பார்த்தால், ஓரு Amazing Indian victory!!!!! அதைப் பார்க்க முடியாத துரதிருஷ்டக்காரன் ஆகி விட்டேன்!
இந்த டெஸ்டில் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் முரளி கார்த்திக் (ஆட்ட நாயகன் விருது மிகப் பொருத்தம்!) என்பதை யாரும் மறுக்க இயலாது. 2 இன்னிங்குகளிலும் முக்கிமான விக்கெட்டுக்களை, சரியான தருணங்களில் வீழ்த்தினார்!! Hats off to him! 3-0-வை விட 2-1 சற்று ஆறுதலாக உள்ளது!
கிளார்க் சற்று முன்னதாகவே பந்து வீச வந்திருந்தால் என்ன ஆகியிருக்குமோ??? Rediff-இல் சொன்னது போல், "India escape to victory" என்பது பொருந்தும் என்றே நினைக்கிறேன்!!! Anyway, I am feeling great!
என்றென்றும் அன்புடன்
பாலா
1 மறுமொழிகள்:
ரெண்டு நாள் ஆபிஸ்க்கு மட்டம்போட்டு, வீட்டம்மாவின் தடையெல்லாம் மீறி, விடிகாலையில் புரண்டபடி நேத்தும் இன்னிக்கும் ஒரு பந்துவிடாமல் பார்த்தேன். இந்த மாதிரி பிட்சில அப்பப்ப மேட்ச் ஆடனுமப்பா!! முழுமேட்சும் பார்த்தது ஏதோ ஹைலைட்ஸ் பார்த்தமாதிரிதான் இருந்தது. இன்னைக்கு சச்சின்/லட்சுமண் ஆடின ஆக்ரோஷ ஆட்டத்தை நம்ம புள்ளைங்க மத்த மேட்சுலையும் காட்டியிருந்தா.... at least இப்பயாவது புத்திவந்துதே! சபாஷ்!
நம்ம டீமின் உடனடி தேவை ஒரு உருப்படியான துவக்க ஆட்டக்காரர். தினேஷ் கார்திக்கை கொஞ்சம் தட்டிக்கொடுத்து ஊக்கம் கொடுக்கனும். மத்தபடி ஒரு fighting spirit'டோட மேட்சிலேயும் ஆடினா போதும்... பார்த்து ரசிக்கலாம்!
Post a Comment